கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட தளபதி விஜய் ரரசிகர்கள் மேலும் 18 பேர் கைது

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. கிருஷ்ணகிரியில், கடந்த 24ம் தேதி நள்ளிரவில், ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிட தாமதமானதால், திரையங்கம் முன் கூடியிருந்த தளபதி விஜய் ரசிகர்கள், கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக, 32 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு தளபதி விஜய் மௌனம் சாதிப்பது ஏனோ