கிருஷ்ணகிரி திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களுக்கு ஜாமின் ❗*

நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி வேண்டும் என வலியுறுத்தி கடந்த 25ம் தேதி விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் 50 பேரில் 28 பேருக்கு மட்டும் தினமும் காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக ரூ. 1.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.