Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/4/d772843141/htdocs/movie/wp-includes/post-template.php on line 293
hacked by h0d3_g4n
திரை விமர்சனம்

கீ – திரை விமர்சனம்

நடிப்பு – ஜீவா, நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி, அனைகா
தயாரிப்பு – குளோபல் இன்பொடைன்மென்ட்
இயக்கம் – காளீஸ்
இசை – விஷால் சந்திரசேகர்
வெளியான தேதி – மே 10, 2019
ரேட்டிங் – 2.25/5

கம்ப்யூட்டர், மொபைல் போன் ஹேக்கிங் பற்றி வெளிவந்த இரும்புத்திரை படம், இந்தப் படத்திற்கு முன்பே வெளிவந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அதை நியாயமாக கீ படம் தான் கொடுத்திருக்க வேண்டும். அவர்களால் சரியான நேரத்தில் படத்தை வெளியிட முடியாத காரணத்தால் இப்போது இரும்புத்திரை போன்று இந்தப் படத்தை எதிர்பார்த்து வந்தோம் என ரசிகர்களை சொல்ல வைத்திருக்கிறது.

அறிமுக இயக்குனர் காளீஸ், தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத கதைக்களமான டெக்னாலஜி விஷயத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உலகில் நமது ரகசியங்களை எளிதில் திருடிவிடலாம், நம்மை நமக்குத் தெரியாமலேயே ஒருவரால் கண்காணிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

சொல்ல வந்த விஷயத்தை அவர் தெளிவாகச் சொல்லியிருந்தால் இந்த கீ படம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருந்திருக்கும் வெற்றி படம் வரிசையில் இடம் பெற்றிருக்கும். ஆனால், மையக்கதையை விட்டுவிட்டு, சம்பந்தமில்லாமல், காதல், சென்டிமென்ட் என தடம் மாறி திரைக்கதையை அமைத்து படத்திற்கு வரவேண்டிய பெயரை அவரே கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

 ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள்  ஹோட்டல் விடுதியில் ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.

கல்லூரியில் படிக்கும் (?) ஜீவா, ஒரு சிறந்த ஹேக்கர். அதற்காக விருதுகளைக் கூட வாங்கியிருக்கிறார். அவருடைய அப்பாவை யாரோ கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், தன்னை கொல்ல நடந்த சதி என்பது ஜீவாவிற்குத் தெரிய வருகிறது. அவருடைய தோழியான அனைகா

பத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.
இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக்  செய்தவர்கள் சர்வ சாதாரண ஹேக்கர் இல்ல அவர்கள் இன்டர்நேஷனல் ஹேக்கர்ஸ் என்பது தெரிய வருகிறது. 
 
, ஜீவாவின் உயிருக்கு ஆபத்து என எச்சரித்தது அப்போதுதான் ஜீவாவிற்கு ஞாபகத்திற்கு வருகிறது. அனகாவைப் பார்க்க அவர் வீட்டிற்குச் செல்ல, விபத்தொன்றில் அனைகா இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அனைகாவின் வீட்டில் உள்ள ஒரு ரகசியப் பெட்டகத்தில் இருக்கும் ஹார்ட்டிஸ்க் ஒன்றை ஜீவா கண்டுபிடித்து எடுக்கிறார். அதன் பின்னர்தான் அவருக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது. தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை
 
நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் பெண்ணாக கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். 
நிக்கி கல்ராணி உருவத்திற்கும் அவருடைய குழந்தைத்தனமான நடிப்பிற்கும் துளியும் சம்பந்தமில்லை.
 
ஆர்ஜே பாலாஜி அடிக்கும் 5 ஜோக்குகளில் ஒன்று மட்டுமே சிரிக்க வைக்கிறது
ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். 
 
படத்தின் இரண்டாவது கதாநாயகியாக அனைகா சோதி. ஆரம்பக் காட்சிகளில் அரைகுறை ஆடையுடன் அத்துமீறும் காட்சிகளில் அரங்கை அலற வைக்கிறார். ஒளிப்பதிவாளரும் பார்த்துப் பார்த்து ஆங்கிள் வைத்திருக்கிறார்.
 
 ஜீவா. ஆனால், அவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படிக்கிறார் என்று நாமே புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய கதாபாத்திர வடிவமைப்பிலும் கொஞ்சம் குழம்பியிருக்கிறார் இயக்குனர். முழுவதுமாக ஒரு ஹேக்கராகக் காட்டியிருக்க வேண்டும், இல்லை ஒரு காதலனாக, கல்லூரி மாணவனாகக் காட்டியிருக்க வேண்டும். இருந்தாலும் ஜீவா முடிந்தவரையில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்
 

கதையாக எழுதும் போது எவ்வளவு பரபரப்பாக, விறுவிறுப்பாக இருக்கிறது. ஆனால், இதை திரைக்கதையில் அப்படியோ கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். சில தேவையில்லாத காட்சிகளை படத்திலிருந்து தூக்கினால் படம் ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். படத்தின் ஆரம்பமும், கிளைமாக்ஸுக்கு முன்பாகவும்தான் இயக்குனர் நினைத்ததைக் கொடுத்திருக்கிறார். மற்ற காட்சிகளை ஹேக் செய்தால் கூட தப்பில்லை.

 
இருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.
 
கடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? 
 
படத்தின் வில்லனாக மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா. இவர்தான் பார்ப்பதற்கு அப்படியே ஹேக்கர் போல இருக்கிறார். சிரிக்காத, சீரியசான இவரது வில்லத்தனமும் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது
 
ஜீவாவின் பெற்றோர்களாக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், சுகாசினி. 
மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்களும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
 
சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது. 
 
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.எடிட்டர் இன்னும் காட்சிகளைக் கட் செய்து படத்தை சுருக்கியிருக்கலாம்.
 

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் இனி, தங்கள் மொபைல் போனில் கண்டதை வைத்துக் கொள்ள மாட்டார்கள். இணையங்களில் கண்ட சைட்டுகளைப் பார்க்க மாட்டார்கள். குறிப்பாக இலவசம் என்ற வரும் லின்க்கை கிளிக் செய்ய மாட்டார்கள். அப்படி நடந்தால் அது இயக்குனர் காளீஸுக்குக் கிடைத்த வெற்றி

 
மொத்தத்தில் `கீ’படத்தை பார்க்கலாம்

Related posts

ஸ்பாட் விமர்சனம்

MOVIE WINGZ

பூமராங் விமர்சனம்

MOVIE WINGZ

நட்புனா என்னானு தெரியுமா – திரை விமர்சனம்

MOVIE WINGZ