குண்டம்மா என்று சொன்னதற்காக நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் நடிகர் தளபதி விஜய் மன்னிப்பு கேட்டார் ! *

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள
‘பிகில்’ திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி உள்பட பலர் விளையாட்டு வீராங்கனைகளாக நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் கிளைமேக்ஸின் போது இந்திரஜாவை பார்த்து “குண்டம்மா, குண்டம்மா” என்று நடிகர் தளபதி விஜய் கூறி இருப்பார். இந்நிலையில், முதலில் தன்னை குண்டம்மா குண்டம்மா என்று கூறுவதற்கு தளபதி விஜய் தயங்கியதாகவும், உடல் தோற்றத்தை குறிக்கும் வகையில் வசனம் பேசியதற்காக இருப்பினும் காட்சியில் நடித்து முடித்த பிறகு தளபதி விஜய் தன்னிடம் வந்து குண்டம்மா என்று கூறியதற்கு
நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் தளபதி விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார். என்றும் இந்திரஜா கூறியுள்ளார்.