Sunday, February 23
Shadow

குப்பத்து ராஜா – திரை விமர்சனம்

    சென்னையில் உள்ள வியாசர்பாடி குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ், குடித்துவிட்டு எந்நேரமும் ரகளை செய்யும் ரோல். வியாசர்பாடி தர லோக்கல் பையனாக திரையில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
கதையின் நாயகன் குப்பத்து ராஜாவின் பெயர் ராக்கெட் (ஜீ.வி.பிரகாஷ்). சேட்டு கடையில் வண்டி சீஸ் செய்யும் வேலை செய்கிறார். குப்பத்தில் வாழ்ந்தாலும் குடிகார அப்பா எம்எஸ் பாஸ்கர், நண்பர்கள், காதலி என மகிழ்ச்சியாக இருக்கிறார்.

பார்த்திபன், படம் முழுக்க கையில் இரண்டு எம்ஜிஆர் புகைப்படம் போட்ட பெரிய மோதிரத்தோடு தான் சுற்றுகிறார். எம்ஜிஆர் ரசிகர் என காட்டுவதால் என்னமோ குப்பத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தலைவர் போல் செயல்பட்டு வருகிறார் பார்த்திபன். எம்ஜிஆர் ரசிகர் என்பதால்

அவரை மக்களுக்காக ஓடி ஓடி உழைப்பவர் போல காட்டியுள்ளாரோ இயக்குனர் பாபா பாஸ்கர்

ஜி.வி.பிரகாஷின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரும், பாபுஸ். விஜய்முத்து பார்த்திபனும் நண்பர்கள். தொடக்கத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷுக்கும், பார்த்திபனுக்கும் எதிரிகள் போல் மோதல் இருந்து வருகிறது.

ஜீ.வி.பிரகாஷ் காதலியாக நடித்த அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி

பாலக் லால்வாணி தமிழ் தெரியாது என்பதற்காக வாயில் சிவிங்கம் வைத்து நடித்துள்ளார் போல.. படத்தில் ஒரு இடத்தில் கூட லிப்சிங்க் இல்லை.

ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். 

நாயகி பாலக் லால்வாணி

இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் 

பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் – பல்லக் லால்வானி 

இடையே அடிக்கடி சண்டை வருகிறது.பூனம் பாஜ்வாக்கும் ஜி.வி.பிரகாஷ்க்கும் காதல் இருக்குமோ என்றுசந்தேகம் கொள்கிறாள்.பல்லக் லால்வானி

அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி போய் இருக்கின்றனர். அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.

கடைசியில், எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார்? காணாமல் போன சிறுவன் என்னவானான்? ஜி.வி.பிரகாஷ் – பல்லக் லால்வானி இணைந்தார்களா? என்பதே குப்பத்து ராஜாவின் மிதி கதை

நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் குப்பத்தில் வாழும் இளைஞனாக மிக அருமையாக நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், 

குப்பத்து தலைவனாக பார்த்திபன் தனது வழக்கமான நக்கலுடன் அமக்களப் படுத்தியிருக்கிறார். 

சிறப்பான நடிப்பு. பல்லக் லால்வானி தைரியமான சென்னை குப்பத்தில் உள்ள

பெண்ணாக தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கிறார். 

பூனம் பஜ்வா படம் முழுவதும் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். தொப்புள் தெரியும் அளவுக்கு சேலை, தோள் தெரியும் அளவுக்கு கவர்சியான ஜாக்கெட் என அவரை கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

Read Also  கே.ஜி.எஃப் விமர்சனம்

பூனம் பாஜ்வா கவர்ச்சி தோற்றத்தில் வந்து செல்கிறார். 

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு மட்டுமே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஈர்த்தது. மகன் எவ்வளவு வயதானாலும் அவன் எப்போதும் தந்தைக்கு குழந்தைதான் என கூறுவதில் இருந்து, மகனுக்கு ஒரு பைக் மட்டும் வாங்கி கொடுத்துவிட்டால் நான் சீமானாக கண்ணை மூடுவேன் என கூறும் தருணம் வரை எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு மனதில் நிற்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் உடன் பெரும்பாலான காட்சிகளில் வரும் யோகி பாபுவின் காமெடி இந்த படத்தில் எடுபடவில்லை. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், கிரண், அஜய் ராஜ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

நடன இயக்குநராக இருந்து  இயக்குநராக அவதாரம் எடுத்து இருக்கி றார் 

பாபா பாஸ்கருக்கு வாழ்த்துக்கள். வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை கோர்த்து படத்தை இயக்கியிருக்கிறார். பாபா பாஸ்கர் 

எனினும் அந்த சம்பவங்கள் படத்திற்கு பெரிதாக உயிர் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வடசென்னை பேச்சும் இயல்பானதாக தோன்றவில்லை, பெரும்பாலான இடங்களில் நாடகம் போல் தோன்ற வைக்கிறது. குப்பத்தில் நடப்பவற்றை மிகைப்படுத்தி காட்டியிருப்பது போல் தோன்றுகிறது. படத்தின் படத்தொகுப்பு, கலை பணிகள் சிறப்பு.

இந்த கதையில் திரைக்கதை சரியாக இல்லை

ஜி.வி.பிரகாஷ் இசையில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் குப்பத்து ராஜாவை எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு முறை பார்க்கலாம்