குருமூர்த்தி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2 / 5

நடிகர் நடிகைகள் :- நட்ராஜ் ( நட்டி), ராம்கி, பூனம் பாஜ்வா, ரவி மரியா, மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ், சஞ்சனா சிங், அஸ்மிதா, பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கே.பி. தனசேகரன்.

ஒளிப்பதிவு :- தேவராஜ்.

படத்தொகுப்பு :-  எஸ்.என். ஃபாசில்.

இசை :- சத்யதேவ் உதயசங்கர்.

தயாரிப்பு :-  பிரண்ட்ஸ் டாக்கீஸ்.

தயாரிப்பாளர் :- சிவாசலபதி, சாய் சரவணன்.

ரேட்டிங் :- 2 / 5

திரைப்பட உலகில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமான கதாநாயகனாக நடிகர் நட்டி அவ்வப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் குணசத்திர வேடங்களில் நடித்து வரவேற்பைப் பெற்று வருகிறார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நட்டி களம் இறங்கி இருக்கும் குருமூர்த்தி திரைப்படம்.

மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் ராம்கி அவருடைய சின்ன வீட்டிற்கு ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் எடுத்துச் செல்கிறார்.

கார் ஒட்டி செல்லும் வழியில் நெஞ்சு வலி ஏற்படுகிற இந்த நிலையில் மாத்திரை போடுவதற்கு ஒரு கடையில் நிறுத்தி வட்டார் பாட்டில் வாங்கும் போது சின்ன பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சினை மத்தியில் மூன்றுபேர் கொண்ட திருட்டுக் கும்பல் காரில் உள்ள பணப்பெட்டியை எடுத்துச் சென்று விடுகிறார்கள்.

இதில் ஒருவன் மட்டும் காரில் இருந்த பணப்பெட்டியை திருடி சென்று டி இலைத் தோட்டத்தில் மறைத்து வைத்து விடுகிறான்.

இந்நிலையில் ராம்கி காவல் துறையில் புகார் செய்கிறார்.

காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் நட்ராஜ் நட்டி மற்றும் மனோபாலா, ரவி மரியா முவரும் சேர்ந்து பணப் பெட்டியை தேடுகிறது.

காவல்துறை ஒரு பக்கம் தேட பயத்தினால் ஒருவர் மறைத்து வைத்த இடம் தெரியாமல் வகுத்துக் கொண்டிருக்கும் போது, அது மற்றொருவன் கையில் கிடைக்க இப்படி அந்தப் பண பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது

இறுதியில் ஜந்து கோடி ருபாய் உள்ள பணப்பெட்டி யாரிடம் கிடைத்தது? ராம்கியின் ஜந்து கோடி உள்ள பணப்பெட்டி கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த குருமூர்த்தி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குருமூர்த்தி திரைப்படத்தில் நடராஜ் என்கிற நட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

கதாநாயகன் நட்ராஜ் பெரும்பாலும் ஜீப்பில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

தன்னால் முடிந்த வகையில் கதாப்பாத்திரத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்.

மிகவும் அருமையாக நடிக்க தெரிஞ்சா நட்ராஜ்யிடம் மேலும் நடிப்புத் திறனை வெளிக் கொண்டு வந்திருக்கலாம்.

இந்த குருமூர்த்தி திரைப்படத்தில் பூனம் பாஜ்வா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழரசி என்கிற கதாபாத்திரத்தில் பூனம் பாஜ்வா அருமையாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ராம்கி மறு பிரவேசம் செய்துள்ளார்.

காவல்துறை ஆய்வாளருக்கு ஜீப் டிரைவராக ரவிமரியாவும் .உடன் பயணிக்கும் ஏட்டாக மனோபாலா வருகிறார்.

அதுவும் அந்த யானை லத்தி காமெடி சகிக்க முடியாத கற்பனை.

மனோ பாலாவை ரவிமரியா உருவக்கேலி செய்யும் காமெடி மிகப்பெரிய அபத்தம்.

இவர்கள் இருவரும் சிரிப்பூட்ட முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி பெரிதாக சிரிப்பு வரவில்லை.

இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா,யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சத்யதேவ் உதய சங்கர் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவு செய்துள்ள தேவராஜ் ஒளிப்பதிவில் ஒரே சீரான தன்மையைப் திரைப்படத்தில் கடைப்பிடிக்கவில்லை.

ஓர் எளிமையான திருடன் போலீஸ் மசாலா திரைப்படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன்.

கால மாற்றத்தில் திரைப்பட துறை அடைந்திருக்கும் வளர்ச்சியை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் ‘குருமூர்த்தி’ திரைப்படம்   சுமாரான ரகம்.