குறும் பட இயக்குனர் எம்.ஆர்.கே. முதன் முதலாக இயக்கும் முழு நீள திரைப்படம்“ஜெனி”

இன்னர்விஷன் என்ற புதிய பட நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் படத்திற்க்கு“ஜெனி” என்ற தலைப்பு வைத்து இருக்கின்றனர். இப்படத்தின் கதை மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரையில்,மூன்று மணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி ஒரு பேயுடன் மாட்டிக்கொண்டு,மூன்று மணி நேரத்தில் எப்படி தப்பித்து வெளியே வருகிறார் என்பதை திரில், மர்மம் கலந்து. ஹாலிவுட் ஸ்டைலில் இந்த ஹாரர் படத்தின் கதை-திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.கே. 

இவர் “தீச்செடி” என்ற குறும் படத்தை இயக்கி மூன்று விருதுகளையும், “எல்லை” என்ற குறும் படம் மூலம் இரண்டு விருதுகளயும் பெற்றவர். முதன் முதலாக இவர் முழு நீள படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகி ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.ஊட்டி, குன்னூர். கோத்தகிரி ஆகிய இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அரவிந் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்க்கு ஜெய்கீர்த்தி இசை அமைக்கிறார்.