குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தும் ஜி.வி.பிரகாஷ

இயக்குநர் விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாட்ச்மேன்’. இந்த படம் வருகின்ற 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேசியதாவது “பொள்ளாச்சி நகரின் முக்கிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொறுத்தியுள்ளோம். இனி இந்த ‘வாட்ச்மேன்’ பொள்ளாச்சி நகரத்தை கண்காணிப்பார். சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது துவக்கம் தான். இதுபோல பல நல்ல வி‌ஷயங்கள் செய்ய உள்ளோம்” என்று அவர்கள் கூறினார். மேலும் வருகின்ற 10ம் தேதி பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இயக்குநர் விஜய் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.