குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி-

துபாய் அறையில் உள்ள குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி குடிபோதையில் இறங்கியபோது நீரில் மூழ்கியதால்தான் அவர் மரணமடைந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாக கூறப்பட்டது.. அவருடன் கணவர் போனி கபூரும், மகள் குஷியும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது உடலுக்கு நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவரது உடல் இன்று இரவு மும்பை செல்லவுள்ள நிலையில் தற்போது அவரது இறப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயின் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள தாவலிலில்
ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளன. நீரில் மூழ்கி அதில் அவர் தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டல் அறையின் உள்ள குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சனிக்கிழமை இரவு சென்றிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் , நீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. \இறப்பில் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குளியல் தொட்டியில் இறங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் மாரடைப்பு ஏற்பட்டவுடன் குளியல் தொட்டியில் இறங்கியிருக்கலாம் என்றும் தெரிகிறது.