கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் – திரை விமர்சனம்

கணவனை கொன்றவர்களை பழி திர்க்க ஒரு அன்பு மனைவி கேங்ஸ்டராக மாறுவதுதான் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின்  மொத்த கதை.

இந்து மதம் பெண்ணான ஜெயா ( பிரியங்கா ருத் ) முஸ்லிம் மதத்தை சேர்ந்த இப்ராஹிமை (அசோக்) கல்லூரியில் படிக்கும் போது  இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது  இருவரும் காதலிக்கிறார். இவர்களின் இருவர் திருமணத்திற்கு ஜெயா வீட்டில் தாய் தந்தை இருவரும்  திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஜெயா அவள் மன தைரியத்தோடு , முஸ்லிம் மதத்துக்கு மாறி இப்ராஹிமை (அசோக்) ஜெயா( பிரியங்கா ருத் ) திருமணம் செய்து கொள்கிறார். பெயரை ரஷ்யாவாக மாற்றி கொள்கிறார்.இருவரும் மிகவும் சந்தோசமாக வாழ்கிறார்கள் 

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற  ஆசையில் தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் வேலு பிரபாகரனின் கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் இப்ராஹிம் ஆனால் தொழில் போட்டியில்  இப்ராகிமை இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் இப்ராஹிம்மை அசோக் என்கவுண்டர் செய்கிறார்கள். இதற்கு வேலு பிரபாகரனும் உடைந்தையாய் இருக்கிறார்.

இந்த விஷயம் ஜெயாவுக்கு தெரிய வர அவளும் கொதித்து எழுகிறார் கணவனை இழந்த பிரியங்கா ருத் இப்ராஹிம் அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் யார் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.

வேலு பிரபாகரன் உதவியாளர் இராமதாஸ்விடம் எனது கணவரை கொன்றவர் யார் என்று கேட்க அவரும் முழு உண்மையையும் சொல்ல வேலு பிரபாகரன் மற்றும் அவரது மகன் என்று தெரிய வரா பிரியங்கா ருத் இவர்கள் அனைவரையும் எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று கோபம் கொள்ள பெண் கேங்கஸ்டராக மாறி தனது கணவனை கொன்றவர்களை எப்படி எல்லாம் பழிவாங்குகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜெயாவாக நடித்துள்ள பிரியங்கா ருத்தின் நடிப்பு மிகவும் அருமை. துணிச்சலான நடிப்பு தமிழ் சினிமாவில் இதுவரை எந்த பெண்ணும் கேங்ஸ்டராக நடித்ததில்லை. எனவே, வித்தியாசமான துணிச்சலான வேடம் அவருக்கு. எனவே, கிடைத்த வாய்ப்பை மிக அருமையாகவும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

பெண்களாலும் இப்படியொரு வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்த முடியும்  என்பதை நிரூபித்துள்ளார் பிரியங்கா ருத்

படம் முழுக்க முழுக்க அடிதடி, வெட்டு, குத்து இரத்தம் துப்பாக்கி என திரில்லராக படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் சி.வி குமாtர். படம் முழுவதையும் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

கேங்ஸ்டர் படம் என்றால் டேனியல் பாலாஜி இருப்பார். இப்படத்தில் இருக்கிறார். கணவனை கொன்றவர்களை பழிதீர்க்க பிரியங்கா ருத்திற்கு உதவும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அதேபோல், வேலுபிரகாரனும் நடிப்பில் மிரட்டியுள்ளார். அசோக், ஆடுகளம் நரேன் இ.ராமதாஸ் ஆகியோரின் நடிப்பும் மிக அருமை. கேங்ஸ்டர் திரில்லர் கதையை கையில் எடுத்து, அதற்கு சரியான திரைக்கதை அமைத்து படத்தை மிகவும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் சி.வி.குமார். சென்னையில் செயல்படும் போதை மருந்து கும்பல் குறித்து பெரும் ஆராய்ச்சி செய்துள்ளார் போலும். படப்பிடிப்புக்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள இடங்கள் அனைத்தும் அருமை அதற்கு . ஓரு பெண்ணை கேங்ஸ்டராக வைத்து அவர் கற்பனை செய்தது, தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரின் கற்பனைக்கும் எட்டாத ஒன்று. இதற்காகவே இதற்காகவே இயக்குனர் சி வி குமாரை பாராட்டலாம்

ஹரி தவுசியா இசையமைப்பாளர் என்றாலும்  பின்ணனி இசை மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. அவரின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. கார்த்திக் குமாரின் ஒளிப்பதிவு லைட்டிங் சென்ஸ் மிக அருமை. அதேபோல், ராதாகிருஷ்ணன் எடிட்டிங்கில் மிகப் பரபரப்பாகவும் தோய்வில்லாமல் படம் விறுவிறுவென செல்கிறது. வன்முறை இரத்தம் அதிகமாக இருப்பதால் இப்படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

மொத்தத்தில்
கேங்ஸ் ஆப் மெட்ராஸ் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஒரு திரைப்படம். 
#GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
#SaiPriyankaRuth #AshokKumar
#DanielBalaji