கேஜிஎஃப்’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது நீங்கள் அறிந்ததே. அத்திரைப்படத்தின் அதிரடி காட்சி அமைப்புகளுக்காக, எங்களுக்கு விருது கிடைத்திருக்கிறது .-அன்பறிவ்
இத்தகைய முக்கியமான தருணத்தில், முதற்கண் எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும், எங்களோடு இணைந்து பணியாற்றிய சக தொழிட்நுட்ப வல்லுனர்கள், நடிக – நடிகையர், ஆகிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த பிரிவில் எங்களுக்கு விருதுக்கு பரிந்துரைத்த, ஆய்ந்து தெரிவு செய்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இது அயராத உழைப்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி . பல வருடங்களாக திரைப்படங்களுக்கான அதிரடி காட்சி அமைப்பில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு ‘கைதி’ 100வது திரைப்படம். 100 வது படம் வெளியாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு இந்த தேசிய விருது கூடுதல் மகிழ்வையும், உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. தற்போது கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கும் அதே குழுவுடன் பணியாற்றி வருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஒரு தருணம், ஊடக நண்பர்களாகிய உங்களது பங்களிப்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை. உங்களது பணி மிகவும் மதிப்பிற்குரியது, பாராட்டுக்குரியது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம்