கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள ‘ஐரா’ திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இதனைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஹீரோ’ படத்தில் நாயகிகளாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவானா நடித்து வருகின்றனர். இந்நிலையில் இதனையடுத்து ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘தர்மதுரை’ படங்களில் நடித்த விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியை வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.