கை(தி) மேல் பலன்; லோகேஷுக்கு 2 படங்களை கொடுக்கும் தளபதி விஜய்
கடந்த வாரம் அக். 25ல் நடிகர் தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் நடிகர் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீசானது.
இதில் கைதி படம் அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையில் பிகில் திரைப்படம் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூலை அள்ளியதாக சில நெட்டிசன்கள் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிகில் படத்துடன் கைதி மோதியதால் அப்போதிலிருந்தே கைதி விமர்சனங்களை கவனித்து வருகிறாராம் தளபதி விஜய்.
மேலும் தன்னுடைய (தளபதி 64) அடுத்த பட இயக்குனர் என்பதால் கைதி ரிசல்ட்டால் விஜய் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
இதனால் தளபதி 66வது படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ்க்கு கொடுக்க தளபதி விஜய் முன்வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.