கொடிக்கட்டி பறந்த இயக்குனர் பாலா தற்போது இவ்வளவு பரிதாபமான நிலையில் உள்ளாரா!
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வரும் படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ நடிகர், நடிகைகள் என அனைவருக்குமே அடுத்தக்கட்டமாக வாழ்க்கையாக இருக்கும்.
ஆனால், சமீப காலமாக இவரின் படங்கள் எதுவும் இல்லை பழைய படங்கள் போல் இல்லை, அவர் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்றார்கள்.
அதற்காகவே அர்ஜுன் ரெட்டி படத்தை பாலா ரீமேக் செய்தார், ஆனால், அதுவும் பாலா ஒழுங்காக படம் எடுக்கவில்லை, என கூறி கைவிடப்பட்டது.
இந்த சமயத்தில் விக்ரம் கைவிட, பாலா ஆர்யா பக்கம் சென்றார், ஆனால், நடிகர் ஆர்யாவும் கால்ஷிட் அப்போது தருகிறேன், இப்போது தருகிறேன் என இழுத்தடித்து வருகிறாராம்.
இதனால், இயக்குனர் பாலா தற்போது வரை எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை என்பதே செய்தி.