கோலிவுட் அறிமுகம் குறித்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ட்வீட்

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அன்பான புள்ளைங்கோ எல்லாதுக்கும் வணக்கம். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ‘சீயான் 58’ படத்தில் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும் நன்றி. மஜா பன்றோம்❗” என்று பதிவிட்டுள்ளார்.

இர்ஃபான் பதான் பதிவிட்டுள்ள ட்வீட் இணைப்பு 👇