கௌதம் கார்த்திக்குடன் STR நடிக்கும் படத்தின் புதிய தகவல்

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடை குறைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குநர் நார்தன் இயக்கவுள்ளார். ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.