சசிகலாவின் வாழ்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இரண்டு இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கி வரும் நிலையில், பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே உள்ள உறவு, ஜெயில், மன்னார்குடி கேங்ஸ் ஆகியவை இந்த படத்தில் இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ள ராம்கோபால் வர்மா, அரசியலில் அன்பு ஆபத்தானது என்ற துணை தலைப்பையும் தெரிவித்துள்ளார். மேலும் ‘சசிகலா’ என தலைப்பிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.