சசிகுமாரின் அடுத்த படம் ராஜ வம்சம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுந்தர்.சி-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் – நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பேட்ட’ படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2′, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கென்னடி கிளப் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்
சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கின்றனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது. சென்னை மற்றும் பொள்ளாச்சியில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.