சசிகுமாருக்கு ஜோடியானார் மடோனா செபாஸ்டியன் !

அசுரவதம் படத்திற்கு பிறகு சசிகுமார் கைவசம் நாடோடிகள் 2,எனை நோக்கி பாயும் தோட்டா,கொம்பு வச்ச சிங்கம்டா என மூன்று படங்கள் உள்ளது.நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன்.இப்படம் அவருக்கு மட்டுமல்ல அப்படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன்பின் அவர் இயக்கத்தில் வெளியான இது கதிர்வேலன் காதல்,சத்ரியன் இரண்டும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.இந்நிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள்.

தற்போது,இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டின் ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும்,இப்படத்தில் முக்கிய வேடங்களில் இயக்குநர் மகேந்திரன்,சூரி,ஹரீஷ் பெராடி,இந்தர்குமார் நடிக்கவுள்ளனர்.உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் இப்படத்தை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர்குமார் தயாரிக்கிறார்.