சசிகுமாருடன் இணையும் முன்னணி திரை பிரபலங்கள்

‘சலீம்’, ‘சதுரங்க வேட்டை 2’ படங்களை தொடர்ந்து இயக்குநர் என்.வி.நிர்மல்குமார், தற்போது நடிகர் சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. இந்நிலையில், ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிக்க நடிகர் சரத்குமார் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவுள்ளது.