சசிகுமார் – சரத்குமார் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹர்சவர்தன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘நா நா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.