சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் நடித்த வரலட்சுமி சரத்குமார்
தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் ‘சேஸிங்’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவில் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி சரத்குமார் கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடுகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், “கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதோ அதன் வீடியோ பதிவு👇
https://youtu.be/qp1bm98U0Hg