சந்தானத்தின் அடுத்த படம்ஆர்.கண்ணன் இயக்கத்தில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜான்சன் இயக்கத்தில் ‘ஏ1’ படத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக ‘பூமராங்’ பட இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவை படமாக உருவாகும் இந்த படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.கே.ராம் பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.