சந்தானம் இல்லாத ‘மிஸ்டர் லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன்

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடித்திருப்பார். ஆனால் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் சந்தானம் இடம்பெறவில்லை. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், சந்தானம் இல்லாத குறையைப் போக்க அதிகம் சிரமப்பட்டுள்ளதாகவும். தனக்கும் நகைச்சுவை வரும் என்பதால் இயக்குநர் ராஜேஷ் பெரும்பாலான காட்சிகளில் ரோபோ சங்கர், யோகி பாபு, நடிகர் சதீஷ் ஆகிய மூவரும் இடம்பெருமாறு காட்சிகளை அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.