சமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு

சினிமா பிரபலங்களின் பெயர்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் ஏராளமான கணக்குகள் உள்ளன.

ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

போலி பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான தகவல்களை வெளியிட்டு அதனால் சிக்கல் வரும்போது. அய்யோ அது நான் அல்ல, என் பெயரில் யாரோ செய்த வேலை என்று கூக்குரலிடுவார்கள். போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுப்பார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் பெயர்களில் போலி கணக்குகளை ஆரம்பித்து மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது அடுத்தக்கட்டத்துக்கும் சென்றுவிட்டனர்.

அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தெரிய வந்ததும் விஜய் தரப்பிலிருந்து எச்சரிகை அறிவிப்பு மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

“சமீப காலத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும் , அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர். மேலும் அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

தளபதி விஜயின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை.

தயவு செய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்த போலி கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.