சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவ லாரன்ஸின் பரிசு வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார். சுனாமி, தானே புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேலான உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு இலவசமாக இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு கஜா புயலால் கணேசனின் இல்லம் சேதமானது. இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு வீடு கட்டி தருவதாக கூறியிருந்தார். அதன்படி தற்போது ரூ.10 லட்சம் செலவில் புதிய வீடு ஒன்றை கட்டி வழங்கியுள்ளார்.