சரவணன்  ஸ்டோர் உரிமையாளர் கதாநாயகனாக  நடிக்கும் படத்தை அஜித் பட இயக்குனர் தான் இயக்குகிறாரா ?

 தனது நிறுவனத்தின் அதிக விளம்பர படங்களில் நடித்து தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன். வலது பக்கம் தமன்னா, இடது பக்கம் ஹன்சிகா என இரு நடிகைகள் அவரது விளம்பரங்களில் நடித்ததால் பலரும் இவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஆனால் அதை எல்லாம் பற்றி  சிறிதும் கவலைப்படாத சரவணன் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் புதியதொரு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இப்போது அப்படத்தை இயக்கவுள்ள இயக்குனருக்கான தகவல் கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமில்லை, இத்தனை காலமாய் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரங்களை இயக்கி வந்த J.D. & ஜெர்ரி தான் என கூறப்படுகிறது. இவர்கள் தான் அஜித் மற்றும் விக்ரமின் நடிப்பில் கடந்த 1997ல் வெளிவந்த உல்லாசம் படத்தை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சரவணன் நடிக்கவுள்ள படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது