சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு சவால் விடும் ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் தமிழ் திரைப்பட உலகில் மூத்த நடிகர் சாருஹாசன் அவர்கள் 87வது வயதில் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘தாதா 87’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி

ஒரு திருநங்கையின் காதலை மையப்படுத்தியும் ஒரு வயதான தாதா கேரக்டரையும் மையப்படுத்தியும் இயக்கி இருந்தார்.

இந்த இயக்குனரின் 2வது திரைப்படமாக “பீட்ரூ” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த “பீட்ரூ” திரைப்படத்தில் மறைந்த முன்னாள் நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் அம்சவர்தன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது 3வது திரைப்படமாக நடிகை  ஐஸ்வர்யா த்த்தாவை கதாநாயகியாக வைத்து ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன்  கதாநாயகனாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா தத்தா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனிதா, ரித்திகா சரண் என பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

யாரும் யூகிக்க முடியாத அளவில் இந்த “PUBG” திரைப்படத்தின் கதையையும் திரைக்கதையையும் உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த ஜூன் மாதம் 8ஆம் வெளியான சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் NAKED TRAILER திரைப்படத்திற்கும் அந்த திரைப்படத்தின் இயக்குனருக்கும் சவால் ஒன்றை விடுத்துள்ளார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

உங்கள் திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். நீங்கள் தைரியமான ஆள். எங்க ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) டீசருக்கு காத்திருங்கள்.. நீங்களே அனைவருக்கும் பாராட்டுவீர்கள் என தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கெனவே சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் NAKED TRAILER பல விதமான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதில் அந்த ஆபாச திரைப்படத்திற்கு இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி சவால் விடுகிறார் என்றால்… இவரின் PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்ற திரைப்படத்தின் டீசர் எப்படி இருக்குமோ…?

ரசிகர்கள் அனைவரும் PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்ற திரைப்படத்தின் டீஸர் டிரைலர் எப்போது வெளியாகும் என மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்

இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் NAKED TRAILER

https://youtu.be/lWwsFh4vttE