சர்ச்சையில் சிக்கிய அனுராக் காஷ்யப்

தேவ் டி, குலால், கேங்ஸ் ஆப் வசிப்பூர் (1,2) போன்ற இந்தி படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தனது மனதில் பட்ட கருத்துக்களை எந்த தயக்கமுமின்றி வெளிப்படையாகக் கூறுபவர். 
 
டாப்சியின் கேம் ஓவர் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுராக் காஷ்யப் பேசியபோது, ‘பத்திரிகையில் பணிபுரியும் புகைப்பட கலைஞர்கள் வேறு ஒருவரின் தனிப்பட்ட இடங்களில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். 
 
நான் தனிப்பட்ட வேலையை செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் என்னை புகைப்படம் எடுத்தால் எனது அந்தரங்கத்தில் ஊடுருவுவதாகத் தான் அர்த்தம்’ என்றார். புகைப்பட கலைஞர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இந்த விழாவில் அனுராக் காஷ்யப்பை மட்டும் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் மறுத்துவிட்டனர்.