சர்வதேச பட விழாவில் திரையிடம் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.விஜய் சேதுபதி நடிப்பை திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டினர். திருநங்கை தோற்றமும் ரசிக்கப்பட்டது. சூப்பர் டீலக்ஸ் மற்ற மொழி திரையுலகினரையும் கவர்ந்தது. இந்த படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. .

இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடைபெற உள்ள சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது. இதற்காக பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் சூப்பர் டீலக்ஸ் படக்குழுவினருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!