சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!! (KJR Studios)

தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது.

தமிழில் அடுத்தடுத்து விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டி தயாரிப்பு துறையிலும் கலக்கி வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்த வருடத்தில் இன்னும் ஆச்சர்யகரமான திரைப்படங்களுடன் வெற்றி நடை போட காத்திருக்கிறது. தமிழை அடுத்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் “தபாங் 3” படத்தினை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.

இந்த சந்தோஷ தருணத்தில் கொட்டாபாடி ராஜேஷ், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தெரிவித்தது…..

இது கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு அதன் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல். இந்த தருணம் மிகவும் பெருமையும் சந்தோஷமும் தரும் தருணம். இனி கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் மேலும் கவனமுடனும், நேர்த்தியுடனும் உலக சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அவர்கள் விரும்பும் தயாரிப்பையும், விநியோகத்தையும் தேர்ந்தெடுத்த படங்கள் மூலம் தமிழகத்திற்கு தரும் என்றார்.

மேலும் தனிப்பட்ட வகையில் நான் “தபாங்” படத்தொடரின் தீவிர ரசிகன். “தபாங்” படத்தொடர் அடித்தட்டு ரசிகன் முதல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது. தபாங் படத்திற்கு தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பு உள்ளதால் தபாங் 3 படத்தினை தமிழிலும் டப் செய்து வெளியிடும் திட்டத்தில் உள்ளோம்.

இப்படம் அறிவிக்கப்பட்டபோதே வெற்றி நிச்சயமாகிவிட்டது. மேலும் இதில் சல்மான்கானுடன் மீண்டும் நடனப்புயல் பிரபு தேவா இயக்குநராக இணைந்தவுடன் இப்படத்தின் வெற்றி 200 சதவீதம் உறிதியாகிவிட்டது. இந்த “தபாங்” குடுமபத்தில் இணைந்ததற்கு சல்மான் கான், அர்பாஸ் கான், ஆதித்யா சௌஷி, பிரபுதேவா மற்றும் இக்குடுமபத்தில் உள்ள இபடத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தபாங் 3 திரைப்படம் டிசம்பர் 20 2019ல் வெளியாகிறது.
தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை திரைக்கதை – திலீப் சுக்லா

இயக்கம் – பிரபு தேவா

தயாரிப்பு – சல்மான் கான், அர்பாஸ் கான், நிகில் திவேதி.

தயாரிப்பு நிறுவனம் – அர்பாஸ் கான் புரட்கஷன்ஸ், ஸஃபரூன் பிராட்காஸ்ட்.

இசை – சஜீத், வஜீத்.

ஒளிப்பதிவு – சன்ஞித் ஷிரோத்கர், மகேஷ் லிமாயா

ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார்கள்.