சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடுரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. இயக்குனர் ஹரி.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மொபைல் போன் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனை அழைத்துச் சென்று போலீஸ் தாக்கியதில் இருவரும் மரணமடைந்தனர்.
அங்கு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர்.
காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரிக்கையும் வைத்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் இருவரை காவல்துறையினர் அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை பல்வேறு துறையினர் கண்டித்து வருகின்றனர்.
திரைத்துறையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் ஹரியும் தனது வருத்ததை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…!” என்று தெரிவித்துள்ளார்.