சாமிதுரை ஊனமுற்றோர் அறக்கட்டளை” துவக்க விழாவில் சினிமா இயக்குனர் பேரரசு பேச்சு !!
இந்தி திணிப்பு கூடாது ! சரி., அடுத்து , தமிழகத்தில் பல பள்ளிகளில் தமிழ் பாடமே இல்லை..! என்பதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது!!
-திரைப்பட இயக்குனரும் மாற்றுத்திறனாளியுமான சாமிதுரை தன்னைப்போன்ற உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து ரொம்ப நாட்களாகவே ஊனமுற்றோருக்கான அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து எந்த வித எதிர்பார்ப்புமின்றி உதவவேண்டுமென்ற லட்சியம் கொண்டவர்!
அவரது லட்சியம் இன்று , திரையுலக விஐபிகள் புடைசூழ இனிதே அரங்கேறியதுடன் வந்திருந்த வி.ஐ.பிகள் கரங்களால் சாமிதுரை ஏற்பாட்டின்படி ஊனமுற்றோர் பலருக்கும்., மூன்று சக்கர ஸ்கூட்டி , சைக்கிள் , பார்வையற்றோகான நவீன கைத்தடி உள்ளிட்டவைகளையும் வழங்கிட மகிழ்வுடன் அந்த அறக்கட்டளை உதயமானது . அதன் விபரம் வருமாறு :-
சென்னை, சாலிகிராமம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது சாமிதுரை ஊனமுற்றோர் அறக்கட்டளை துவக்க விழா!
இந்த விழாவிற்கு வந்திருந்த இயக்குனர் பேரரசு .,
இவ்விழாவிற்கு வந்திருந்த “தூத்துக்குடி ” படக்கதாநாயகி கார்த்திகாவை குறிப்பிட்டு பல கதாநாயகியர் தங்கள் பட டிரைலர் வெளியீடு , பாடல் இசை வெளியீடு… உள்ளிட்டவைகளுக்குக் கூட வர மறுத்து , தயாரிப்பாளருக்கு தர்ம சங்கடம் தரும் சூழலில் நடிகை கார்த்திகா ., இது மாதிரி பொது விழாக்களில் கலந்து கொள்வது பாராட்டிற்குரியது. அதே மாதிரி , இந்தி திணிப்பு கூடாது எனும் தமிழர்களின் போராட்டம் பாராட்டிற்குரியது. ஆனால் அதே நேரம் , நம் ,தமிழகத்தில் பல பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடமே இல்லை….என்பதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. என்றெல்லாம் பேசி சாமிதுரையின் ஊனமுற்றோர் அறக்கட்டளைக்கு வாழ்த்து தெரிவித்து தன் கரங்களால் மாற்று திறனாளிகளுக்கு பல உதவிகளையும் வழங்கினார்.
இவ்விழாவில், இயக்குனர் பேரரசு மாதிரியே ,பட இயக்குனர்கள் செந்தில்நாதன், “திமிரு “தருண் கோபி, கணேஷ் பாபு , பாபு கணேஷ் , ரமேஷ் கண்ணா ,தயாரிப்பாளர் மதுரை செல்வம் , பாடலாசிரியர்கள் சினேகன் ,சொற்கோ, நடிகை “தூத்துக்குடி ” கார்த்திகா , டான்ஸ் மாஸ்டர் சாய் பாரதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தங்கள் கரங்களால் சாமிதுரை ஊனமுற்றோர் அறக்கட்டளை வழங்கிய ., மூன்று சக்கர ஸ்கூட்டி , சைக்கிள் , பார்வையற்றோகான நவீன கைத்தடி உள்ளிட்டவைகளையும் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் வழங்கி சாமிதுரையையும் ,அவரது அறக்கட்டளையையும் பாராட்டி பேசினர்.
அனைவருக்கும் திரைப்பட இயக்குனரும் மாற்றுத்திறனாளியுமான சாமிதுரை தன் அறக்கட்டளை சார்பில் நன்றி கூறிட விழா இனிதே நிறைவுற்றது!