சாமியாராகும் விஜய் தேவரகொண்டா

நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், விஜய் தேவரகொண்டா. அவர் தெலுங்கில் நடித்த அர்ஜுன் ரெட்டி படம், தமிழில் துருவ் நடிப்பில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா நடித்த துவாரகா என்ற படம், அர்ஜுன் ரெட்டி என்ற பெயரிலே தமிழில் டப்பிங் ஆகிறது.

தமிழ் வசனத்தை ஆண்டனி ரிச்சர்ட் எழுதுகிறார். பூஜா சவேரி, பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்கியுள்ளார். ஒரு திருடன் திடீரென்று சாமியாராக மாறினால் என்ன நடக்கும் என்பதை கலகலப்பாக சொல்லும் படம் இது.