சாம்பியன் திரை விமர்சனம்

நடிப்பு – விஷ்வா, மிருணாளினி, சௌமிகா, நரேன் மனோஜ் பாரதிராஜா மற்றும் பலர்

தயாரிப்பு – களஞ்சியம் சினி ஆர்ட்ஸ்

இயக்கம் – சுசீந்திரன்

இசை – அரோல் கொரேலி

மக்கள் தொடர்பு – ஜான்சன்

வெளியாகும் தேதி – 13 டிசம்பர் 2019

ரேட்டிங் – 3./5

தமிழ் மண்ணின் பாரம்பரியத்தின் வீர விளையாட்டான கபடி விளையாட்டை மையமாக வைத்து தான் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார்
இயக்குனர் சுசீந்திரன். இயக்கும் அனைத்து படங்களும் ரசிர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதேபோல் இந்த திரைப்படத்திலும் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து ஒரு நெகிழ்வான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் சுசீந்திரன்

இயக்குனர் நடிகர் சசிகுமார் பாரதிராஜா நடித்த கென்னடி கிளப் என்கின்ற திரைப்படத்தை இயக்கிய சுசீந்திரன் தான் இந்த சாம்பியன் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இதற்கு முன்பு வெண்ணிலா கபடி குழு, ஜீவா என இரண்டு உணர்வு பூர்வமான விளையாட்டுப் படங்களை இயக்கியவர்தான் சுசீந்திரன். இந்த சாம்பியன் படத்தையும் உணர்வுபூர்வமாகவே கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடித்து வெளிவந்த பிகில் படத்தின் எளிமையான, யதார்த்தமான ஒரு வெர்ஷன் தான் இந்த சாம்பியன்.

பிகில் படமே கென்னடி கிளப், கனா உள்ளிட்ட சில விளையாட்டுப் படங்களின் காட்சிகளுடன் கூடிய திரைப்படமாகத்தான் அமைந்தது.

எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் அதில் ஒரு எமோஷன் இருந்தால் அது திரைப்படம் பார்க்க வரும் பார்வையாளனை ஈர்க்கும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். அது இந்தப் படத்திலும் சரியாகவே அமைந்துள்ளது.

மீண்டும் ஒரு வட சென்னை விளையாட்டுப் படமா என படம் ஆரம்பிக்கும் போதே ஒரு சலிப்பு நமக்குள் வருகிறது. அதையும் மீறி கதைக் களத்தாலும், யதார்த்தமான கதாபாத்திரங்களாலும் தொடர்ந்து படம் பார்க்கும் நமக்கு அந்த சலிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். சுசீந்திரன் அதற்கு படத்தின் திட்டமான நீளமும் உதவி புரிந்திருக்கிறது.

வட சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்து பையனான கதாநாயகன் விஷ்வா-விற்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தாட்டம் என்றால் உயிர். ஆனால், அதை விளையாடப் போனால் அவருடைய விதவை அம்மா அடித்து உதைப்பார். இருப்பினும் அம்மாவுக்குத் தெரியாமலேயே கால்பந்து விளையாடி சிறந்த வீரராகிறார்.

கல்லூரியில் படிக்கும் போது பெரிய கோச்சிங் கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்க விரும்புகிறார். சிறு தடைக்குப் பின்பு நரேன் நடத்தும் கோச்சிங் கிளப்பில் சேர்கிறார்.

இதனிடையே, ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய அப்பா மனோஜை அந்த ஏரியா கவுன்சிலர் ஸ்டண்ட் சிவா தான் கொலை செய்தார் என்ற உண்மை கதாநாயகன் விஷ்வாவிற்குத் தெரிய வருகிறது. அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். ஆனால், ஒரு பக்கம் கோச் நரேன் அதைத் தடுத்து கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என கண்டிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை.

ஏழை இளைஞன் விஷ்வா ( ஜோன்ஸ் ) கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாதபடி அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் கதாநாயகன் விஷ்வா. அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு வந்தவராம். ஆனால், வியாசர்பாடி இளைஞனாக, கரடு, முரடாக கதாபாத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

நிஜமான கால்பந்து வீரராகவே தெரிகிறார். அதற்கான ஒரு வருடப் பயிற்சி அவருக்கு உதவியிருக்கிறது. நடிப்புக்கு மட்டும் பயிற்சி தேவையில்லை, விளையாட்டு வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் பயிற்சி அவசியம் என்பது புரிகிறது.

கதாநாயகன் விஷ்வா வின் நடிப்பு முதல் படம் போலவே இல்லை சினிமா உலகில் பல படங்கள் நடித்தவர் போல நடித்து உள்ளார் இவருடைய நடிப்பு மிகவும் அருமை.

இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள், சௌமிகா, மிருணாளினி. கதாநாயகன் விஷ்வா பள்ளியில் படிக்கும் போது அவரைக் காதலிப்பவராக கதாநாயகி சௌமிகா, கல்லூரியில் படிக்கும் போது காதலிப்பவராக கதாநாயகி மிருணாளினி. இருவருக்கும் அதிக வேலையில்லை, இருந்தாலும் யதார்த்தமான கதாபாத்திரங்களில் அவர்களுடைய நடிப்பு திரைப்படத்திற்கு பொருத்தமாய் அமைந்துள்ளது.

கால்பந்து கோச் ஆக நரேன். கைதி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக வாசவி, அப்பாவாக மனோஜ் பாரதிராஜா, வில்லனாக ஸ்டன் சிவா ஆகியோரின் நடிப்பும் குறிப்பிடும்படி உள்ளது.

அரோல் கொரேலி இசையமைப்பில் பின்னணி இசை உயிரோட்டமாகவே உள்ளது. வட சென்னை பகுதிகளை அதன் இயல்பு மாறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்.

இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே மொத்த படமும் முடிவடைவதும், தேவையில்லாத காட்சிகள் இல்லாததும் படத்திற்கு பிளஸ் பாயின்ட். காதல் காட்சிகள் மட்டும் சினிமாத்தனமாக உள்ளது. மற்றபடி ரசிக்கும்படியான ஒரு ஆக்ஷன் ஸ்போர்ட்ஸ் படம்தான் இந்த சாம்பியன்.

சாம்பியன் – உண்மையாகவே சாம்பியன் தான்