சாய்தன்ஷிகாவின் ஸ்டண்ட் பயிற்சி எடுக்கும் வைரலாகும் வீடியோ!

ஹீரோவுடன் மரத்தை சுற்றி டூயட் மட்டும் பாடிக்கொண்டிருந்த ஹீரோயின்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் ஹீரோயின்கள் ரிஸ்கான காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி ஒருசில நடிகைகள் ரிஸ்க் எடுத்து நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை வரலட்சுமி ஸ்டண்ட் கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியது தெரிந்ததே. அந்த வகையில் நடிகை சாய்தன்ஷிகாவும் தற்போது ஸ்டண்ட் பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்தால் சாய்தன்ஷிகா எந்த அளவுக்கு ஸ்டண்ட் பயிற்சியில் முழு ஈடுபாட்டுடன் இருக்கின்றார் என்பது புரிய வரும். ஏற்கனவே சாய்தன்ஷிகா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ‘கபாலி’ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி நடித்து அசத்தியுள்ளார் என்பது தெரிந்ததே

நடிகை சாய்தன்ஷிகா தற்போது ‘கிட்னா’, ‘யோகிடா’, ‘இருட்டு’ ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.