சாஹோ’ படத்தில் இருந்து விலகிய பிரபலங்கள்

”பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த மூவேந்தர்களான சங்கர்-எஹ்ஸான்-லாநய் படத்தில் இருந்து விலகியுள்ளனர். படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மாற்றாக வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.