சாஹோ படத்துக்கு பயந்தது வேஸ்ட்டா போச்சே.; காப்பான் மைண்ட் வாய்ஸ்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரூ. 350 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரபாஸின் சாஹோ படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் காப்பான் ரிலீசை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் சாஹோ படம் மோசமான விமர்சனங்களை தமிழகத்தில் சந்தித்து வருகிறது.

சாஹோ படத்திற்கு பயந்து காப்பானை தள்ளி வைத்தது வீணாகிவிட்டதே என காப்பானின் மைண்ட் வாய்ஸ் கோலிவுட்டில் கேட்கிறதாம்.

ஆனாலும் சாஹோ படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ. 300 கோடியை வசூலை எட்டியுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.