சிங்கத்துக்கு குரல் கொடுத்து சிங்கத்தை வாழ வைத்தது அரவிந்தசாமி தான்-தி லயன் கிங்

உலகெங்கும் அனிமேஷன் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது .

அந்த வகையில் தி லயன்கிங் படத்திற்கும் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகம் உள்ளது. அரவிந்தசாமி அழகுக்கு இருக்கும் மாஸ் அவர் குரலுக்கும் உண்டு.

தனி ஒருவனில் அவர் பேசிய வசனங்கள் இன்றும் இளைஞர்களின் ரசிகர்கள் மத்தியில் ஸ்டேடஸ்டாக இருக்கிறது. தற்போது முழுக்க முழுக்க அனிமேஷனில் உருவாகியுள்ள தி லயன் கிங் படத்தில் ஹீரோவான சிங்கத்தின் குரலாக அரவிந்தசாமியின் குரல் கர்ஜிக்க இருக்கிறது. உலகெங்கும் வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ் வெர்சன் வரும் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

குழந்தைகள் உள்பட ஒட்டுமொத்த ரசிகர்களும் மத்தியில் படத்தைக் காண ஆவலோடு இருக்கிறார்கள். நடிகர் அரவிந்தசாமி ஒரு காரணம் என்றால் படத்தில் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்ட அனிமேஷன் மற்றொரு காரணம் என்கிறார்கள் படக்குழுவினர். தமிழ்நாட்டு மக்கள் அரவிந்தசாமி குரலுக்காகவே தியேட்டரில் கூடுவார்களே என இது எதிர்பார்க்கப்படுகிறது