சித்தார்த்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் த்ரிஷா.

சித்தார்த்தும், திரிஷாவும் ஆயுத எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் தற்போது, இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்து நல்ல வசூல் செய்தது. இந்த நிலையில், அந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன ஆயுஷ்மேன் கதாபாத்திரத்தில் சித்தார்த், ராதிகா ஆப்தே வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.