சினிமாத்துறைக்கான தேசிய விருது வழங்குதல் குறித்த தகவல்
ஆண்டுதோறும் இந்தியாவில் சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்கு மத்திய அரசு சார்பாக தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் விருது பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பும், மே மாதம் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்நிலையில் இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவருவதால் இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேசிய விருது பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளிவரும் என எதிரிபார்க்கப்படுகிறது.