சின்னத்திரைக்கு வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்

பெரும்பாலான சினிமா பிரபலங்கள் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் கமல், சூர்யா, அரவிந்த்சாமி, விஷால், விஜய் சேதுபதி, என பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளனர். அந்தவகையில், தற்போது நயன்தாராவும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த தொலைக்காட்சியில் அவர் தோன்றுகிறார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இவர், கமல் நடத்திய பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் தோன்றுகிறார அல்லது நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வருகிறாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்