சின்னத்திரையில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது இவர் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மியூசிக் ரியாலிட்டி ஷோ சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியின் தூதராக அவர் செயல்படுவார் என்பதும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முழுநேரமும் யுவன் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.