சின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா. வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா?!

பாடகி சின்மயியைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படக்கலைஞரும் பாடகியும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்த சிந்துஜா ராஜாராம் புகார்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். கவிஞர் காதலராக மாறி தனக்குக் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்களை விலாவாரியாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். #MeToo புரட்சியில் வைரமுத்து புயல் புரட்டிப் போடப் பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இந்தப் புயலைக் கிளப்பிய சிந்துஜா ராஜாராம், கலிஃபோரினியாவில் வசித்து வரும் தமிழர்.

சிந்துஜா ராஜாராம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் வெளியானதும், வைரமுத்துவின் காதல் லீலைகள் குறித்து ஆங்கில செய்தி இணையதளம் ஒன்று, அவரிடம் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டு பதில்களைப் பெற்றது.
அந்தக் கட்டுரையில் சிந்துஜா குறிப்பிட்ட போது, முதலில் சின்மயிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க மட்டுமே எனது பெயரைச் சொல்லாமல் வைரமுத்து மூலம் எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பதிவிட்டேன். பின்னர் அவரால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் ஓப்பனாகப் பேசு என்றதால் சொல்கிறேன். அவரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட பெண்களின் பெரிய பட்டியல் இன்றும் என்னிடம் உள்ளது.

அப்போது எனக்கு 18 வயது இருக்கும்! தமிழ் சினிமாவில் பாடவும் நடிக்கவும், வாய்ப்பு கிடைத்தால் இசையமைக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தேன். என் தாய் தந்தையர் பெங்களூருவில் இருந்ததால் சென்னையில் தங்குவதற்கு சரியான லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, வைரமுத்து நடத்தும் ஹாஸ்டலுக்கு வந்தேன்.

அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், உங்கள் பேச்சில் மிக நாள் நட்பு தெரிந்தது என்று கூறிய வைரமுத்து, என் தாயாருடனான தொலைபேசி வழி உரையாடல் குறித்துக் கூறினார். அப்போது நான் கம்போஸ் செய்திருந்த ஆல்பம் சிடி., நிகழ்ச்சிகள் தொகுப்பு இவற்றைக் கொண்டு சென்றிருந்தேன். அவற்றைப் பெற்றுக் கொண்ட அவர், இவற்றால் தாம் மிகவும் இம்ப்ரஸ் ஆனதாக கூறினார். தொடர்ந்து, என்னை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்துவைப்பதாகவும் கூறினார். எங்கள் சந்திப்பு சுமார் 20லிருந்து 30 நிமிடங்கள் நீடித்தது.

அங்கு சேர்த்த பின்னர், என் தாய் தந்தையர் பெங்களூரு திரும்பிவிட்டதை அறிந்து கொண்ட வைரமுத்து, தனது கவிதை லீலைகளைக் காட்டத் தொடங்கினார்.

‘வா. உன்னை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்பார். உன்னை நினைத்து காதல் கவிதை எழுதியிருக்கிறேன். பெசன்ட் நகர் வீட்டுக்கு தனியே வா என்பார். ஒரு கட்டத்தில் என் தலையே சுக்குநூறாகும் அளவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கத் தொடங்கி விட்டார்.

அதன் பிறகு மெதுமெதுவாக அவரது தொலைபேசி அழைப்புகளை தவிர்க்கத் தொடங்கினேன். என்னிடம் இவ்வாறு அவர் டார்ச்சர் கொடுத்து தவறாக நடந்து கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவிப்பார் என்றால் என்னால் அவரது ஆபாச நடவடிக்கை குறித்து நிறைய ஆதாரங்களை வெளியிடமுடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார் சிந்துஜா ராஜாராம்!

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் மீண்டும் குறிப்பிட்டுள்ள சிந்துஜா, யாரையும் தண்டிப்பதோ குற்றம்சாட்டுவதோ எனது நோக்கமல்ல! ஆனால் உண்மை வெளிவரவேண்டும். ஒவ்வொருவரும் அந்த பாலியல் வக்கிர நபர் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு வெளியிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.