சிம்புவின் நடிக்கும் அடுத்த படம் ஜூன் மாதம் துவக்கம்

  நடிகர் சிம்பு நடிக்க தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரை படத்திற்காக தயாராகி வருகிறார். மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
அடுத்ததாக கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிக பெருட்செலவில் ஆக்‌ஷன் கலந்த
த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது, “முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார். மேலும், “நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது” என்றும் தெரிவித்தார்