சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று 2 ஆம் கட்ட விசாரணையாக வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பெண் உள்பட 5 பேர் கொண்ட விசாரணை குழு, சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகள், பண்ணை வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்துள்ளது தொடர்பாக, ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இப்புகார் தொடர்பாக சசிகலாவின் ரத்த சம்மந்தமான உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்பட பலரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவிடம் மட்டும் விசாரணை நடத்தாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்ககோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு ஐடி அதிகாரிகள் கடிதம் அனுப்பினார்கள்.

மேலும், அதை பரிசீலனை செய்த சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினர்.

இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று 2-வது நாள் விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி தற்போது சசிகலா சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.