சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே 16’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே 16’ படத்தின் தகவல்கள் கடந்த 2 நாட்களாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ், சூரி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.