சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இசையமைப்பாளர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கிய ‘மிஸ்டர் லோக்கல்’ வரும் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி சமீபகாலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் “டக்குன்னு டக்குன்னு” சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருக்கும் நிலையில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.