சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இரு பிரபல இயக்குநர்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 5 படங்கள் தயாராகி வரும் நிலையில், பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தற்போது முன்னணி இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் சமுத்திரகனி  படக்குழுவில் இணைந்துள்ளனர்.

இதுதவிர பாரதிராஜா
சமுத்திரகனி
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.