சுட்டுப் பிடிக்க உத்தரவு’ திரைப்படம் திரையிடும் தேதி அறிவிப்பு
‘இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில், இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், நடிகர் விக்ராந்த், நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் பணிபுரியும் காவலாளியாக நடிக்கிறார்கள். மேலும் இயக்குநர் மிஷ்கின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற ஜூன் மாதம் 14ம் தேதி திரையிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.